Saturday, November 23, 2013

இசைப்பிரியா

இசைப்பிரியா உயிரோடு இன்றிருந்தால்; அவரும் அனாதரவாகத்தான் நின்றிருப்பார். இன்று புகழும் அதே நாவுகள் வெட்கமில்லாமல் முன்னாள் போராளிகளை பற்றி பேசுவதுபோல, எத்தனை ஆமிக்காரனோடு படுத்தாளோ என்று பேசியிருப்பார்கள்.

இசைப்பிரியாவை வைத்து நியாயம் கேட்க அவர்கள் முயலவில்லை. இலங்கைக்கு ஒரு பாடம் படிப்பிக்கணும். அத வெச்சு லண்டன்ல கோப்பை கழுவணும்... பெயருக்கு பின்னால லண்டன்னு போடணும் இவ்வளவுதான் இலக்கு

காணமற்போனவர்களின் உறவினர்கள் பிரித்தானிய பிரதமரிடம் முறையிட முண்டியடிப்பு


புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பில் பிள்ளைகளை பலி கொடுத்த தாய்மாருக்குத்தான் தமது பிள்ளைகள் மீது ஒரு துளியேனும் பாசம் இல்லை போல. ஒருத்தரையும் காணோம்!

இவ்வளவு நாளைக்குப்பிறகும் காணமல்போனவர்கள் கிடைப்பார்கள் என்று நம்புகிறார்களா?

விசாரணை விசாரணை என்று என்னதான் சாதிக்கப்போகிறார்கள்? அதைவிடுத்து இனி நடக்கப்போவதை பேசலாமே.

உலகில் செல்வாக்கு மிக்க முஸ்லிம்கள் பட்டியலில் ரிசாட் பதியுதீன்

ரிசாட் பதியுதீன் உலகில் செல்வாக்கு மிக்க (Influential) 500 முஸ்லிம்களில் ஒருவராக பட்டியலிடப்பட்டிருக்கிறார். அவர் உண்மையில் பொருத்தமானவரே.

நிற்க, இன்னொருவர் அந்த பட்டியலில் இருக்கிறாரா என நீங்கள் தேடலாம். அவர்தான் யாரையும் இன்புளூவன்ஸ் பண்னுவதில்லையே! http://kattankudi.info/2013/11/21/21492

கவிஞர் ஜெயபாலன் கைது! விடுதலைக்காக முகா அமைச்சர்கள்

மக்களின் பிரச்சினை பற்றி பேசத்தான் ஆட்கள் இல்லை. அதுவே யாராவது பிரபலமாக இருந்தால் உடனே தீர்வு! ஜெயபாலனை கைதுசெய்தது சரியா பிழயா அன்பதற்கப்பால், அவர் சமாதான விரும்பியாக இருந்தார் என்பதெல்லாம் எவ்வளவு பெரிய பொய்கள்! இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் பேசியவையெல்லாம் என்னவாம்
தான் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்த கவிஞர் ஜெயபாலன் அமைச்சர்களான பசீர் சேகுதாவுத் மற்றும் ரவூவ் ஹக்கீம் ஆகியோர் தனது விடுதலை தொடர்பாக உரியதரப்புடன் பேசியுள்ளதாக தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு தெரிவித்துள்ளதாக குளோபல் தமிழ் செய்திகளுக்கு கவிஞர் ஜெயபாலன் தெரிவித்தார்


Monday, November 11, 2013

HURRICANE? CYCLONE? TYPHOON? இவை எல்லாம் என்ன?

HURRICANE? CYCLONE? TYPHOON? இவை எல்லாம் என்ன?

இவை எல்லாம் சூறாவளியையே குறித்தாலும் அதன் இடத்தையும் சேர்த்தே குறிக்கின்றன.

HURRICANE; அட்லாண்டிக், கரீபியன் கடல், வடகிழக்கு மற்றும் மத்திய பசிபிக் ஆகிய இடங்களையும் சேர்த்தே குறிக்கிறது.

TYPHOON வடமேல் பசிபிக்கையும்

CYCLONE வங்காள விருகுடா மற்றும் அரேபிய கடலையும் குறிக்கின்றன.

வேகம்
மணிக்கு 119 km வேகத்தை சராசரியாக சூறாவளி கொண்டிருக்கும்

SOURCES: World Meteorological Organization, National Oceanic and Atmospheric Administration, Weather Underground., and http://news.yahoo.com/hurricane-cyclone-typhoon-heres-difference-203732059.html

Tuesday, October 29, 2013

மீண்டும் வலையுலகத்திற்கு

நண்பர் Muralitharan Mauran இன் வழிகாட்டலில் ஆலோசனையில் மீண்டும் வலையுலகிற்கு பிரவேசிக்கலாம் என்றிருக்கிறேன். காரணங்கள் அவர் ஏற்கெனவே எழுதியிருப்பதுதான்

//சமூக வலையமைப்புக்களில் எனக்கிருந்த பெரும் மனக்குறையத் தீர்ப்பதற்காகத்தான் இந்த வலைப்பதிவு.

அவ்வப்போது தோன்றும் எண்ணங்களை, செய்திகள் மீதான துரித எதிர்வினைகளை, நண்பர்களின் கருத்துக்களுக்கான உடனடிப் பதிலை சமூக வலையமைப்புக்களில் எழுதுகிறேன்.

அவை  வேண்டிய நேரங்களில் மறுபடி படிக்கக்கூடியவண்ணம் ஒழுங்காகச் சேமிக்கப்படுவதில்லை. ஆழ்கிணற்றில் போட்ட கல்லுப்போலப் போய்விடுகிறது.

அவற்றை பொதுவெளியில் ஒழுங்காகப் பதிவு செய்யவே இந்த வலைப்பதிவு. இதிலுள்ள கருத்துக்கள் உரிய முறையில் மனதினுள் ஒழுங்குபடுத்தப்பட்டு மேலதிக ஆய்வுகளினூடாகக் கட்டுரையாக/வலைப்பதிவாக எழுத்தப்படுவனவல்ல.

இவை அவ்வப்போது மனதில் தோன்றும் சிறு சிறு பொறிகளின் ஒழுங்குபடுத்தப்படாத பதிவுகள். முழுமையானவை அல்ல.

இங்குள்ள அனைத்தும் வெறும் எண்ணப்பொறிகளே.//